தமிழக மீனவர்கள் 5 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகு ஒன்றையும் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி படகுடன் 5 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த 5 மீனவர்களும் பிற்பகலுக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதன் பின்னர்தான், மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா அல்லது விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.
ஏற்கனவே, இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்திருப்பது தமிழக மீனவர்களிடையே வேதனையை அதிகரித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க தமிழக அரசும் மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications