5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 5 கல்லூரிகளில் பணியாற்றிய முதல்வர்கள் ஓய்வு பெற்றனர். இதனால் அந்த பணியிடங்கள் காலியாகின.
இதனையடுத்து இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப மருத்துவக் கல்வி இயக்ககம் அதிரடி நடவடிக்கை எடுத்து முதல்வர் பணி இடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டர் குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டர் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரியில் டீனாக பணியாற்றிய பில் கிரகாம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய முதல்வர் துளசி ராமன் நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஹர்சத் சிட்டியா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications