கோவில்பட்டி அருகே சாலை விபத்து.. பஸ் மீது கார் மோதி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலையில் பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.
இன்று அதிகாலையில் மேலக்கரந்தை பகுதியில் சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு இன்னோவா கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.
அந்த இடத்தில் வந்தபோது திடீரென அது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சம்பந்தம், தாமோதரன், மகேந்திரன், சங்கர், மதுரை ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலினார்கள்.
லோகநாதன் என்பவர் படுகாயமடைந்தார். அவரை அருப்புக்கோட்டைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications