அடுத்தடுத்து 5 பேர் கொலை: பீதியில் நெல்லை,குமரி,தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குடும்பத்தகராறு, டாஸ்மாக் பாரில் தகராறு என நெல்லை,குமரி,துத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து 5பேர் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

துத்துக்குடி மடத்தூர் மெயின் ரோட்டில் பலசரக்குக் கடைவைத்து தொழில் செய்து வருபவர் ஈரோடு நகரைச் சேர்ந்த சங்கர் இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும்,புவனா என்ற 4வயது குழந்தையும் உள்ளனர். இன்றுகாலை சங்கர் சந்தைக்கு போய் கடைக்குத் தேவையான காய்கறி,பலசரக்கு சாமான்களை வாங்கிவந்து கடையில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

குடும்பத் தகராறு

அப்போது மனைவி கோகிலா இப்பதானே கடைக்குப் போனீர்கள் அதற்குள் திரும்பி வந்துவிட்டீர்களே என்று கேட்டுள்ளார். தீடீரென வாக்குவாதம் இருவருக்குள்ளும் மோதலாக உருவெடுக்கவே கோபமடைந்த சங்கர் மனைவியை கிரைண்டர் கல்லை கொண்டுத் தாக்கி கொலை செய்தார்.

தாயின் மடியில் அலறிய 4வயது பென்குழந்தையை சுவரில் வீசி கொலைசெய்துள்ளார். இதுகுறித்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் போலீசில் புகார் செய்யவே விரைந்துவந்த போலீசார் சங்கரை கைதுசெய்தனர்.

டாஸ்மாக் கடையில் கொலை

தென்காசி அருகேயுள்ள இலஞ்சி டாஸ்மாக் கடை அருகே வசிப்பவர் வேல்சாமி புதன்கிழமை இரவு இவர் மற்றும் இவரது உறவினர் கணேசன் ஆகியோர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது அதே பகுதியை சார்ந்த சிலருக்கும் வாக்குவாதம் உருவானது.இதில் அதே பகுதியை சார்ந்த நாகராஜன் தரப்பினர் இருப்பு கம்பியால் வேல்சாமி,கணேசன் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களை நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளித்ததில் வேல்சாமி பலனளிக்காமல் பலியானார்.

வீட்டுத் திண்ணையில் கொலை

தென்காசி அருகேயுள்ள சுரண்டை ஊர்மேல் அழகியான் கிராமத்தைசார்ந்தவர பாலசுப்பரமணியன் கூலித்தொழிலாளியான இவர் புதன்கிழமை நள்ளிரவு வீட்டுமுன் உள்ள திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இன்று அதிகாலை இவரது மனைவி பொண்ணு எழுந்து வாசல் தொளிக்க வெளியே வந்து பார்த்த போது ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடக்கவே உடனடியாக தென்காசி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.இதுகுறித்து அவரது மனைவி தனது கணவனை யாரோ மர்ம ஆசாமிகள் கொலைசெய்துவிட்டனர்.அவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று போலீசில் புகார் செய்துள்ளார்.

வீட்டு மாடியில் கொலை

குமரிமாவட்டம் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஜெகதீஷ் இவர் புதன்கிழமை நள்ளிரவில் நண்பர்கள் கூப்பிடுவதாக கூறிவிட்டு அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிகிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் காணாததால் தாமதமாக வருவான் என்று நினைத்துவிட்டு வீட்டுக்குள் இருந்து விட்டனர். நள்ளிரவில் வீட்டின் மொட்டை மாடியில் யாரோ ஓடுவது,நடப்பது போல் சப்தம் கேட்கவே ஜெகதீசின் தந்தை ராஜேந்திரன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு பலத்த காயங்களோடு ஜெகதீஸ் பிணமாக கிடப்பைதுக் கண்டு அதிர்ச்சி அசைந்த அவர் அலறியுள்ளார். உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசுக்குத் தகவல் சொல்லவே போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி ஜெகதீசை கொலைசெய்தவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் நெல்லை,குமரி.,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 5பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பீதியில் மக்கள்

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் ஒருகாலத்தில் கொலை, வெட்டு குத்துகளுக்கு பெயர் பெற்றிருந்தன. இந்த நிலை கடந்த சில ஆண்டுகாலமாக மாறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+