எங்ககிட்ட 5 கட்சி இருக்கு.. வாங்க பழகலாம்: தேமுதிகவுக்கு வலைவிரிக்கும் தமிழிசை
சென்னை: தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மட்டும் உறுதியாகியுள்ளது. இன்னொருபுறம் மக்கள் நல கூட்டணி பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர்.
நேற்று பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர். நேற்றிரவு 10 மணியளவில் பிரகாஷ் ஜவடேகர் திடீர் என்று கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சரத்குமாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக அவர் பேச்சு நடத்தினார். அப்போது பாஜக கூட்டணியில் இணைவது என்று சமத்துவ மக்கள் கட்சி முடிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார் ஜவடேகர்.
இந்த சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது அவர் கூறியதாவது:-

5 கட்சிகள்...
பாஜக கூட்டணியில் சேர 5 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. பாஜக தலைமையில் பலம் மிக்க கூட்டணி உருவாக்கப்படும்.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை...
தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி மாற்று சக்தியாக உருவெடுக்கும்.

திமுக - காங். கூட்டணி...
திமுக- காங். கூட்டணி இயல்பாக சேர்ந்தது அல்ல, இயலாமையால் சேர்ந்தது. இதேபோல், மக்கள் நலக்கூட்டணியில் மக்களும் இல்லை, நலனும் இல்லை.

வெற்றிக்கனி...
தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்தில் வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுப்பார்' என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications