சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, தூத்துக்குடி, குமரி, தஞ்சைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்கள்!!
சென்னை: மழைவெள்ளத்தால் மூடப்பட்ட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ரயில் சேவைகள் தொடங்குகின்றன. மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூருக்கு இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சென்னையில் பல இடங்களில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து நாளை வரை சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் முழுமையாக மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனிடையே சென்னையில் வெள்ளம் வடிந்த நிலையில் இன்று இரவு 4 சிறப்பு ரயில்களை தென்மாவட்டங்களுக்கு இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் விவரம்:
வண்டி எண் 06155 சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசியில் நின்று செல்லும்.
வண்டி எண் 06156 சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நின்று செல்லும்.
வண்டி எண் 06150 சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவு 9.30 மணிக்கு இந்த ரயில் புறப்படும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புர, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி மற்றும் மிலாவிட்டானில் நிற்கும்,
Spl train TONIGHT frm EGMORE; to Kanyakumari, Madurai, Tirunelveli,sencottai, Tanjore #ChennaiRainsHelp #chennairain pic.twitter.com/JprWBdQm3v
— BenHur (@gbenhur) December 4, 2015 வண்டி எண் 06154 சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசியில் நின்று செல்லும்.
வண்டி எண்: 06157 சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தஞ்சாவூருக்கு இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் நின்று செல்லும்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications