நாமக்கல்லில் 4 பேர் துப்பாக்கி முனையில் கைது- பதுங்கியிருந்தது தீவிரவாதிகளா?
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரை சென்னையில் இருந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் குழு துப்பாக்கி முனையில் மடக்கி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் தீவிரவாதிகளா? மாவோயிஸ்டுகளா? என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
நாமக்கல் நாகராஜபுரத்தில் 4 பேர் தங்கியிருந்த வீட்டை சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார் இன்று பகல் 12.30 மணியளவில் சோதனையிட முயன்றனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்தார். போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த வீட்டில் தங்கியிருந்த 4 பேரையும் கைது செய்து முகத்தையும் மூடியபடி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த பொருட்களையும் மூட்டையாக கட்டி போலீசார் எடுத்துச் சென்றனர். .4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கியிருந்தனர்.
இங்கு தங்கியிருந்தவர்கள் யார், எதற்காக போலீசார் கைது செய்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதேபோல் போலீசார் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றது துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நாமக்கல் போலீசாரோ எங்களுக்கு எதுவுமே தெரியாது என்கின்றனர். இதனால் நாமக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications