மதுவை தொடர்ந்து... 5 வயது சிறுவனை 'பீடி' குடிக்க வைத்த கொடுமை... வைரலாகப் பரவும் வீடியோ!
சென்னை: ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனை பீடி குடிக்க வைத்து சிலர் வேடிக்கைப் பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள மேல் சோழங்குப்பத்தில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுவனை சிலர் மது குடிக்க வைத்த வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுவிற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த வீடியோவிற்கு கண்டனங்கள் வலுத்தன. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

பீடி குடிக்கும் சிறுவன்...
இந்நிலையில், தற்போது சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை சிலர் பீடி குடிக்க வைத்த காட்சி ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அப்பாவா?
அந்த வீடியோவில் காக்கி சட்டை அணிந்துள்ள நபரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு பீடி கொடுக்கப்படுகிறது. அதனை அச்சிறுவன் வாயில் வைத்ததும், மற்றொருவர் அதனை பற்ற வைக்கிறார்.

6 ஆண்டு சிறை...
சிறுவன் பீடியை புகைக்கத் தொடங்கியதும், பின்னணியில் பேசும் ஒருவர், ''இந்த காட்சி வெளியானால் 6 ஆண்டு தண்டனை கிடைக்கும்'' என கூறுகிறார். ஆனால், அவரது பேச்சை பொருட்படுத்தாமல் சிறுவனை பீடி புகைக்க சுற்றி இருப்பவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

இருமல்...
அதனைத் தொடர்ந்து சிறுவனும் சில முறை பீடி புகையை உள்ளே இழுத்து பின் வெளியே விடுகிறான். இதனால் சிறுவனுக்கு இருமல் ஏற்படுகிறது. பின்னர் அச்சிறுவனிடம் இருந்து பீடி வாங்கப் படுகிறது.
வைரல் வீடியோ...
இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப் பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications