ஒரு நிமிஷம் தான்..ஒரு வருட உழைப்பும் போச்சே! பண்ணையைச் சூழ்ந்த தீ..துடிக்க துடிக்க உயிரிழந்த கோழிகள்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருவம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இவரது பண்ணையில் பல செட்டுகள் அமைத்து அதில் கோழி குஞ்சுகளை வளர்த்து வருகிறார். சுமார் 10,000க்கும் மேற்பட்ட கோழிகளை அவர் பராமரித்து வரும் நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோழிகளுக்கு இவர்கள் தீவனம் வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு செட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பம் காரணமாக மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்த செட்டுகளுக்கும் பரவியது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கோழி பண்ணை முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் அவர் வளர்த்து வந்த ஐயாயிரம் கோழிகள், தீவனங்கள் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications