கோவையில் துணிகரம்.. 2 வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை!
2 வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கோவை: கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம சூலூரில் நேற்று ஒரே நாளில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைந்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சூலூர் விமானப்படைத் தளத்தின் பின்புறம் உள்ள காடம்பாடி பிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் 45. இவர் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் தனது மனைவி சிலம்புச்செல்வி மற்றும் மகனுடன் சனிக்கிழமையன்று தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றிருந்தார்.

நேற்று காலை ஊரிலிருந்து நேராக வங்கிக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு முன்பக்கமாக உடைந்து திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ.80,000 பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
அதேபோல சூலூர் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள பி.கே.டி.நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன், தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியர் இவரும் இவரது வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது இவரது வீடும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த 23 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த இரட்டை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாகவும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சூலூரில் ஒரே நாளில் இரண்டு வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications