மதுரை நெடுஞ்சாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி
மதுரை: மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இன்று காலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது திண்டுக்கல்லில் இருந்து வந்த சரக்கு லாரி மோதியது. பெருமாள்கோவில்பட்டி பிரிவு என்ற இடத்தில் நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல், மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சரக்கு லாரி அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications