அடுத்தடுத்து 6 வீடுகளில் திருட்டுப் பசங்க அட்டகாசம்.. தூத்துக்குடி மக்கள் டென்ஷன்
தூத்துக்குடி: தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் 6வீடுகளில் தொடர் கொள்ளை நடநதுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனியின் 14வது தெருவில் தொடர்ச்சியாக 6வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. தபால் தந்தி காலனியில் வசித்து வரும் சொர்ணவேல் என்பவர் குடும்பத்துடன் திருவண்ணாமாலை கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சொர்ணவேலின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள சுந்தரம், சாமுவேல்,நயினார் உள்ளிட்ட 6பேர் வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு தங்க நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.ஆள் இல்லாத வீடுகளாக பார்த்து நோட்டம் விட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.
வீட்டின் உரிமையாளர்கள் வந்த பின்னர் தான் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரியவரும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications