தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 500 மாடுகள்... ரயில் மோதி 60 மாடுகள் பலியான பரிதாபம்
மதுரை: மதுரை அருகே, 500 கிடைமாடுகள் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது, ரயில் மோதி 60 மாடுகள் பரிதாபமாக பலியாயின.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் கிராமத்தில் சுமார் 500 கிடைமாடுகள் வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. நேற்று மதியம் அருகில் உள்ள வைகை ஆற்றில் தண்ணீர் குடித்த மாடுகள் மீண்டும் மேயச்சல் நிலத்துக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளன.
அப்போது அந்த வழியாக வந்த குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மாடுகள் மீது மோதியுள்ளது. இதில் சுமார் 60 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. மேலும் பல மாடுகளின் உடல் உறுப்புகள் சேதம் அடைந்து தூக்கி வீசப்பட்டன.
விபத்துக் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா, தேனூர் ஊராட்சி மன்ற தலைவி லோகசுந்தரி சோனைமுத்து, மண்டல துணை தாசில்தார் மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பலியான மாடுகளை பார்வையிட்டனர்.
காயம் அடைந்த மாடுகளுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தனர். மாடுகளின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால், ரெயில்வே போலீசார் அவரை தேடி வருகின்றனர். விசாரணையில் மாடுகளைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சி செய்ததும், அது பலனளிக்காமல் போனதும் தெரிய வந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications