குளித்தலை அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் பலி
குளித்தலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர்: குளித்தலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 5 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த 11 பேர் ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பினர். அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வந்த போது மணல் லாரி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் கார் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். படுகாயங்களுடன் 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications