திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமி, திருப்பூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ராஜாமணி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை கலெக்டராக பணிபுரிந்து வந்த கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் நில அளவை இயக்குனராக மாற்றப்பட்டு அவருக்கு பதில் தூத்துகுடி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை கலெக்டராக இருந்த எஸ்.பழனிச்சாமி கால்நடைத்துறை துணை செயலராக மாற்றப்பட்டு, சுரேஷ்குமார் நாகைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி, நில நிர்வாகத்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ், பள்ளிக்கல்வித்துறை இணை செயலராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த நந்தகுமார், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications