ஜப்பான் செல்ல தேர்வான 7 தமிழக மாணவர்கள்!
சென்னை: கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான மாணவர்கள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பான் நாட்டுக்குச் செல்ல தேர்வாகியுள்ளனர்.
"ஜெனிசிஸ்" என்னும் இந்த திட்டத்தின் கீழ் வருடம்தோறும் பள்ளி மாணவர்கள் இந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்குச் செல்வார்கள்.
இது ஒரு குறுகிய கால சுற்றுப்பயணமாக அம்மாணவர்களுக்கு அமையும்.
ஜப்பானில் கல்வி வளர்ச்சி:
கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் 7 பேரும் ஜப்பான் நாட்டில் 10 நாட்கள் தங்கி, அந்த நாட்டின் கலாச்சாரம், விளையாட்டு, கல்வித் திறமைகளை வளர்க்க உதவியாகச் செயல்படுவார்கள்.
மாணவர்கள் தேர்வு:
இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. இந்த விவரங்கள் மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன.
மொத்தம் 7 பேர்:
அதிலிருந்து கீழ்க்கண்ட 7 மாணவர்கள் ஜப்பான் செல்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
படிப்பு மற்றும் விளையாட்டு:
மூன்று பேர் படிப்புக்காகவும், 4 பேர் விளையாட்டுப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு பெற்றவர்கள் விவரம்:
அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த 7 மாணவர்கள் எஸ். பிரபாகரன் , எஸ்.சில்வியா, டி.யோகேஸ்வரி, வி.ரோஹித், ஆர்.ராமகிருஷ்ணன், கே.அருண் வெங்கடேஷ், எம்.காயத்ரி ஆகியோர் ஆவர்.
மாவட்ட வாரியாக தேர்வு:
இவர்கள் சென்னை, சேலம், நாகர்கோவில், ஏற்காடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் தேதி அறிவிப்பு:
இவர்களுடன் மேற்பார்வையாளராக வேலப்பஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஜப்பான் செல்லும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications