65 வயது காமாட்சி பாட்டியின் கள்ளக்காதல்.. அரிவாளால் வெட்டித் தள்ளிய வையாபுரி தாத்தா!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே 65 வயது பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதை அறிந்த அவரது 70 வயதுக் கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார்.
பாலப்பட்டி என்ற ஊரில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தத் தாத்தாவின் பெயர் வையாபுரி. இவரது மனைவி பெயர் காமாட்சி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரையும் கட்டிக் கொடுத்து விட்டனர். வெளியூர்களில் அவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே லடாய் ஏற்பட்டு இருவரும் தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 45 வயதான செல்வன் என்ற கொத்தனாருக்கும், காமாட்சிப் பாட்டிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியாக இருந்த காமாட்சிப் பாட்டியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார் செல்வன்.
இதை அறிந்த வையாபுரி ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் நேற்று காலங்கார்த்தாலேயே காமாட்சியும், செல்வனும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைப்பார்த்து வையாபுரி ஆத்திரத்தின் உச்சிக்கேப் போய் விட்டார்.
காலையிலேயே ஆரம்பித்து விட்டீர்களா என்று கோபத்தில் அரிவாளை எடுத்து காமாட்சியை சரமாரியாக வெட்டினர். தடுத்த செல்வனையும் வெட்டினார். இதனால் செல்வன் ஓடி விட்டார். காயமடைந்த காமா்ட்சியை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த செல்வன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளார். வையாபுரியை போலீஸார் கைது செய்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications