20 பவுன் நகைக்காக 70 வயது பாட்டி கொலை... காஞ்சிபுரத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல் நிலையம் அருகிலேயே நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய காஞ்சிபுரம், பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மனைவி லோகநாயகி (70). கணவர் இறந்த பின் சொந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார் லோகநாயகி.

இந்நிலையில், நேற்று மதியம் சங்கரமடம் அருகே உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்டு தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் லோகநாயகி. அப்போது மர்மநபர்கள் லோகநாயகியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், லோகநாயகியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அவரது நகைகளை திருடர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
லோகநாயகியின் மாடி வீட்டில் முன்னர் குடியிருந்த ஷகிலா என்பவர் தனது அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்க 3 மணியளவில் வந்துள்ளார். அங்கு திறந்திருந்த வீட்டில் லோகநாயகி இறந்து கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது லோகநாயகியின் இடது காது அறுக்கப் பட்டு அவரது கம்மல் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இந்தக் கொலை நகைக்காகத் தான் நடந்ததா அல்லது போலீசை திசை திருப்ப திருட்டும் நடைபெற்றுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கும் இடையே 100 மீ., இடைவெளி மட்டுமே உள்ளது. காவல் நிலையம் அருகேயே பகல் நேரத்தில் கொலை நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications