8 மாத குழந்தை 3வது பெருங்குடல் அறுவை சிகிச்சைக்காக போராடி வருகிறது.. உதவி செய்யுங்களேன்!
சென்னை: அனிருத் என்ற 8 மாத குழந்தை தன்னுடைய 3வது பெருங்குடல் அறுவை சிகிச்சைக்காக போராடி வருகிறது. முடிந்தால் உதவுங்கள்.
எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குழந்தை அனிருத் தான். என் கணவர் நான் தாய்மை ஆன அந்த தருணத்தை கொண்டாடியதை என்னால் இன்றளவும் மறக்க முடியாது. என் வீடு முழுவதும் எனக்கு பிறக்க போகும் செல்லக் குழந்தைக்காக அழகான ஆடைகள், சுவர் முழுவதும் புன்னகைக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் என்று அவர் வெளிப்படுத்திய சந்தோஷம் எல்லையில்லாதது. என் செல்லக் குழந்தையை வரவேற்பதற்காக நாங்கள் காத்துக் கிடந்தோம். அவனுக்காக பிற்ககும் முன்னமே நாங்கள் அனிருத் என்ற பேர் சூட்டி மகிழ வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

அனிருத் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் அவனின் குடல் நன்றாக வளர்ச்சி அடையவில்லை. அவனால் இயல்பாக மலம் கழிக்க முடியாது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலியும் இரத்தத்தையும் அவன் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். அவனுக்கு இதனால் 3 பெருங்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இவர்களின் குடும்பத்தின் மாத வருமானம் வெறும் 15,000 ரூபாய் தான். அதற்குள் குடும்ப செலவு, அனிருத் மருத்துவ செலவு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதில் 3 அறுவை சிகிச்சை என்பது அவர்களுக்கு யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆயினும் கூட அனிருத் தந்தை தன் மகனின் உயிரைக் காப்பாற்றப் போராடி வருகிறார். வங்கியில் 2,50,000 வரை கடனாக பெற்று தன் மகனின் மருத்துவ செலவுகளை சமாளித்து வருகிறார்.
அவரின் பயன் வீண் போகவில்லை. அனிருத்தின் முதல் அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்தது. மற்ற இரண்டு அறுவை சிகிச்சைகளும் அனிருத் உயிரை மீட்டுத் தரும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிறந்ததுமே அவனை பார்க்கக் கூட முடியாத படி குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அவனை வைத்து விட்டனர். அம்மா விரல்களை பிடித்துத் தூங்கின்ற நிலையில் இருக்கும் அந்த பிஞ்சு குழந்தையின் உடம்பைச் சுற்றி டியூப்புகளும் மருத்துவ கருவிகளும் தான் இருக்கின்றன.
ஓவ்வொரு முறையும் மலம் கழிக்கும் போது அவன் படும் வேதனை யாராலும் தாங்க முடியாத மரண வேதனை. அவன் அழும் போது நாங்களும் கண்ணீர் விடுகின்றோம். எப்படியாவது என் குழந்தையை இந்த ரண வேதனையிலிருந்து மீட்டு விடு என்று நான் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு அம்மாவாக நீ திரும்ப வந்து விடுவாய், இந்த அழகான உலகம் உனக்காக காத்து இருக்கிறது, என்னுடன் விளையாட வருவாய் என்று அவனுடன் பேசிக் கொண்டே இருப்பேன். எங்கள் உறவினர்கள், நண்பர்கள் உதவிய பணத்தின் மூலம் அனிருத்தின் இரண்டாவது அறுவை சிகிச்சையையும் நல்லபடியாக முடிந்தது.
தற்போது இந்த குடும்பம் அவர்களின் குழந்தையின் இறுதி அறுவை சிகிச்சைக்காக நம் உதவியை நாடி வந்துள்ளது. நாம் எல்லாரும் சேர்ந்து செய்யும் உதவி தான் அனிருத் வாழ்க்கையை தொடங்கி விட போகிறது. உயிருக்காக போராடி வரும் இந்த குழந்தையை மீட்டெடுத்துக் கொடுத்தால் அதை விட ஒரு தாயுக்கு பெரிய சந்தோஷம் இருக்காது. இந்த இறுதி அறுவை சிகிச்சை முடிந்தால் அவன் பூரணமாக குணமாகி விடுவான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான். நீங்கள் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். அந்த பிஞ்சு குழந்தைக்கு வலியில்லாத வாழ்க்கையைப் பரிசாக அளிக்க முடியும்.
அவனின் இறுதி அறுவை சிகிச்சைக்காக உங்கள் உதவி தேவைப்படுகிறது. என் குழந்தையை காப்பாற்ற உதவிக் கரம் நீட்டுங்கள். உங்களின் சிறு உதவி இந்த குழந்தையின் உயிரை காக்கும் மனிதநேயமாக இருக்கட்டும். ஒரு பெற்றோராக நாங்கள் படும் வேதனைக்குக் கை கொடுங்கள்.
ஒரு உயிர் காக்க மனித நேயத்துடன் உதவி செய்வோம். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறு உதவியே!.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications