புதுக்கோட்டையில் விபரீதம்... 2 சாலை விபத்துகளில் 8 பேர் பரிதாப பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று அதிகாலை நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாயினர்.
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி சுவாமியை திருமயம் அருகேயுள்ள கடையக்குடி பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று விழா முடிந்தும் ஊர் திரும்புவது வழக்கம். சுவாமியுடன் பக்தர்களும் நடந்து செல்வார்கள்.
சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்ததைத்தொடர்ந்து திங்கள்கிழமை கடையக்குடியிலிருந்து மாட்டு வண்டியில் திருமயத்துக்கு புறப்பட்ட சுவாமியுடன் சுமார் 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நடந்து வந்தனர்.
அரசம்பட்டி பாம்பாற்றுப்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் சென்றபோது புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் திருமயம் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த லெட்சுமி, ராஜேஸ்வரி, தேவி, லெட்சுமணன், தெட்சிணாமூர்த்தி ஆகிய 5 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருமயம் போலீஸார் அங்கு சென்று அனைவரையும் மீட்டு திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த திருமயம் எம்.எல்.ஏ பி.கே. வைரமுத்து மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல இன்னொரு சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் இரு விபத்துக்களில் 8 பேர் பலியானதால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications