தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 8 பேர் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகி இருப்பதாக சட்டசபையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களையும் பதம் பார்த்துவரும் இந்நோய் மெல்ல தமிழ்நாட்டுக்குள்ளேயும் ஊடுருவ தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இன்றைய சட்டசபை கூட்டத்தின்போது விளக்கம் அளித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் இதுவரை 225 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 115 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து விட்டதாகவும், இதுவரை இந்நோயின் தாக்கத்துக்கு 8 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறினார்.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 4 லட்சம் 'டமிஃப்ளு' மாத்திரைகளும், 20 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளும், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 7 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications