8 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
Subscribe to Oneindia Tamil
கோட்டைப்பட்டினம்: இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனத்திலிருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களை கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கான தீர்வு காண முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27ந் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இதன் பின்னர் இலங்கை மீனவர்கள் 16 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படை இன்று மீண்டும் 8 மீனவர்களை கைது செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications