விழுப்புரத்தில் தலித் சிறுவன் கொலை...தாய்-14 வயது மகள் பலாத்காரம்...வெறியர்களை கைது செய்யுமா போலீஸ்?
விழுப்புரத்தில் தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தாயையும், 14 வயது சகோதரியையும் மர்ம கும்பல் பலாத்காரம் செய்தது.
Recommended Video

விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலத் தகராறு காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினர் தலித் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அடித்து கொன்றனர். பின்னர் அவரது தாயையும் 14 வயது சகோதரியையும் சரமாரியாக அடித்த அந்த கும்பல் அவர்களை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் விழுப்புரம் மாவட்டம், வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

தாயுடன் வசிக்கும் 14 வயது சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இவர்களது வீட்டின் கதவை உடைத்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் விதவை பெண்ணையும் , அவரது சிறுமியையும் சரமாரியாக தாக்கியது.
பின்னர் அங்கிருந்த 8 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தாயையும், சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இந்நிலையில் மறுநாள் காலையில் இவர்கள் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே வராததை கண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 8 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் ஆடைகளின்றி இருந்ததை அடுத்து அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் 14 சென்ட் நிலத்துக்காக இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்ததுள்ளது தெரியவந்தது.
சம்பவம் நடந்து 4 நாட்களாகியும் இதுவரை போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications