ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது
செம்மரம் வெட்டியதாக 83 தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேரை அம் மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறை, வனத்துறையினர் சேர்ந்து சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேர் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை, பத்வேல், பொதத்தூரில் 83 பேரை வனத்துறை கைது செய்தது. கைதான தமிழர்கள் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள். கைதானவர்களிடம் இருந்து 42 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications