ஏற்காடு தொகுதியில் அமைதியாக தேர்தல்- 90% வாக்குப்பதிவு!
சேலம்: ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக முடிவடைந்தது. இத்தேர்தலில் மொத்தம் 90% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் கடந்த ஜூலை மாதம் காலமானார். இதனால் அத்தொகுதிக்கான இடம் காலியானது. இதைத் தொடர்ந்து ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிட்டனர். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்..
இந்த நிலையில், ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6.30 மணிக்கே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பலத்த பாதுகாப்பு
வாக்குப் பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்தல் பார்வையாளர் ரவிபிரகாஷ் அரோரா தொகுதி முழுவதும் சென்று வாக்குப் பதிவையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டபடி இருந்தார்.

அமைதியான தேர்தல்..
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி வரை ஒருசில வாக்குச்சாவடியில் வாக்குப் போட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் 5 மணிக்கு பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

90% வாக்கு பதிவு
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 90% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரியும், சேலம் மாவட்ட ஆட்சியருமான மகரபூஷணம் தெரிவித்தார்.

8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
வரும் 8ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று நண்பகலுக்குள் முடிவு தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications