கரூரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 கவுன்சிலர்களின் பதவிக்கு ஆபத்து
கரூர்: கரூர் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 9 கவுன்சிலர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தே தீர வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த தமிழக போக்குவரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் நகராட்சி திருமாநிலையூர் ராயனூர் பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை சார்பில் 2013ம் ஆண்டு ஜூன் மாத் 20ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசால் வெளியிட்டப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி தேமுதிக கவுன்சிலர்கள் மாலதி, ஜமுனா, நாகராஜன், திமுகவைச் சேர்ந்த ரவிக்குமார், கவுன்சிலர் நாராயணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, மாரியம்மாள், மதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சத்தியமூர்த்தி ஆகிய ஒன்பது பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் நகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றபோது பேசிய நகராட்சி துணைத் தலைவர் காளியப்பன் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒன்பது கவுன்சிலர்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள கவுன்சிலர்கள் மீது தமிழ்நாடு நகராட்சி சட்டப் பிரிவுகளின் கீழ் மற்றும் இதர சட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் காரணமாக திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் 9 பேரின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications