மீட்டருக்கு மேல் கேட்ட ஆட்டோக்கள்– ஒரு மாதத்தில் 935 ஆட்டோக்களுக்கு “சீல்”
சென்னை: சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பதாக அதிக அளவிலான புகார்கள் குவிந்து வருகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து புகார் நிலையத்திற்கு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்து குவிந்து கொண்டே உள்ளது.

இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களின் மீதான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சோதனை நடக்கிறது. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இந்த மாதம் 24 ஆம் தேதி வரை உள்ள ஒரு மாத காலத்தில் அதிக கட்டணம் வசூல், மீட்டர் போடாமல் இயங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 935 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து 3 முறை புகாரில் சிக்கினால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்களின் அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications