சென்னையில் மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவன்.. கொன்று புதைத்து பழி வாங்கிய 4 பள்ளி சிறுவர்கள்!
சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு நாள் காணவில்லை என்று தேடி வந்தது.
ஆனால் அதே தெருவில் வசிக்கும் வேறு சில சிறுவர்கள்தான் இவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்களே கொலையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

நடந்தது
சென்னை சூளைசென்னைட்டில் பழைய புத்தகங்கள் விற்றுவரும், பெருமாள் என்பவரின் மகன்தான் ராஜேஷ். 10 வது படிக்கும் இந்த சிறுவன், கடந்த ஜனவரி 14ம் தேதி, நுங்கம்பாக்கம் அருகே இருக்கும் மைதானம் ஒன்றிற்கு விளையாட சென்றுள்ளான். அங்கே இன்னும் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது அவர்களை கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான்.

கொன்றனர்
அப்போது அங்கிருந்த நான்கு சிறுவர்களும் இவனிடம் பணம் கொடுக்க முடியாது என்று சண்டையிட்டு இருக்கிறார்கள், இந்த சண்டை முற்றவே நான்கு பேரும் சேர்ந்து, அவனை அங்கேயே அடித்து கொன்று இருக்கிறார்கள். பின்அவனை பக்கத்தில் இருந்த மின் மயானத்தில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

போலீசிடம் புகார்
இந்த நிலையில் அதே நாளில், போலீசிடம் பெருமாள் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். சூளைமேடு போலீஸ் இதுகுறித்து விசாரித்து வந்துள்ளது. ஆனால் காணாமல் போனதற்கான தடையமோ, கொலைக்கான தடையமோ எதுவுமே போலீசுக்கு கிடைக்கவில்லை.

சரண் அடைந்தனர்
இந்த நிலையில்தான், அந்த சிறுவர்கள் நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து நுங்கம்பாக்கம் போலீசில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் ஏன் சரண் அடைந்தார்கள், இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் செய்த கொலையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications