பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை முட்புதரில் கண்டெடுப்பு- போலீஸார் தீவிர விசாரணை
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே உள்ள முட்புதரில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்பதயறிந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, முட்புதரினுள் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமுதா என்ற பெண்ணுக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் நேற்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். மருத்துவமனையில் அளித்த தகவலில் அவரது பெயர் அமுதா, அவரது கணவர் பெயர் முரளி என்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications