Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா போல கொண்டை.. அம்மா போல புடவை.. சசிகலாவை ஒரு பிடி பிடித்த அதிமுக பெண் தொண்டர்!

ஜெயலலிதா போல நடை உடை என அனைத்தையும் சசிகலா மாற்றியதை சொல்லி அதிமுக பெண் தொண்டர் ஒருவர் கிழித்துவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அம்மா போல கொண்டை.. அம்மா போல புடவை.. சசிகலாவை ஒரு பிடி பிடித்த அதிமுக பெண் தொண்டர்!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா போல நடை உடை என அனைத்தையும் சசிகலா மாற்றியதை சொல்லி அதிமுக பெண் தொண்டர் ஒருவர் கிழித்துவிட்டார்.

    இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கே சின்னம் வழங்கப்பட்டுள்ளதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியுள்ளார்.

    அமைச்சர்களும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது நீதி வென்று விட்டது என பேட்டிக் கொடுத்து வருகின்றனர். இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் திரண்டனர்.

    தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

    தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

    அவர்கள் ஜெயலலிதா படத்தை கையில் ஏந்தியப்படி குத்தாட்டம் போட்டனர். மேலும் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    அம்மா போல கொண்டை..

    அம்மா போல கொண்டை..

    அப்போது தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பெண் தொண்டர் ஒருவர் சசிகலாவை சரமாரியாக சாடினார். ஜெயலலிதா போல கொண்டை, ஜெயலலிதா போல ஜாக்கெட், அவரைப் போலவே புடவை, ஜெயலலிதா போல ஸ்டைல் என சசிகலா வலம் வந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

    சசியால் ஜெ.ஆக முடியாது

    சசியால் ஜெ.ஆக முடியாது

    ஜெயலலிதா போல் என்ன செய்தாலும் சசிகலாவால் ஜெயலலிதாவாக ஆக முடியாது என்றும் அவர் கூறினார். தொழிலாளி முதலாளியாக முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தினகரனுக்கு தகுதி இருக்கா?

    தினகரனுக்கு தகுதி இருக்கா?

    தினகரனையும் விடாமல் வெளுத்து வாங்கினார் அந்த பெண். முதல்வராக ஆசைப்பட்டார் தினகரன், அதற்கான தகுதி அவருக்கும் சசிகலாவுக்கும் உண்டா என்றும் கேட்டு விளாசிவிட்டார் அந்த பெண் தொண்டர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+