மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை... ஒரே கயிறில் தூக்கில் தொங்கிய வயதான தம்பதி!
சென்னையில் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிழக்கு முகப்பேரை அடுத்த பாடிபுதுநகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. 67 வயதான இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவியின் பெயர் கோதை. இந்த வயதான தம்பதி மகன்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற எண்ணத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்புசாமியின் மனைவி கோதைக்கு காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். குப்புசாமிக்கும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.

ஒரே கயிறில் தூக்கு
இருவரும் உடல் நிலை மோசமடைந்ததால் வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன்களுக்கு தொல்லை தரக்கூடாது என எண்ணிய அவர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரே கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

கல்விச் செலவுக்கே போதாத நிலை
அதில் தங்களின் மகன்கள் ஈட்டும் வருமானம் அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்கே போதாத நிலையில் அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என தனியாக வசித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தாங்கள் இருவருக்கும் உடல்நிலை மோசமாகிவிட்டதால் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உருக்கமான கடிதம்
தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ள குப்புசாமி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு கொடுத்துள்ள அட்வான்ஸ் தொகையையும், தான் செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் தர வேண்டிய சம்பளத்தையும் தங்களது மகன்களிடம் வழங்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications