நாமக்கல் அருகே பஸ் முன்பு திடீரென குறுக்கே வந்த சைக்கிள்.. சமயோஜிதமாக காப்பாற்றிய டிரைவர்.. வீடியோ
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்பட்டை அருகே சைக்கிளில் வந்தவர் திடீரென குறுக்கே புகுந்த நிலையில், அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பக்கத்து ரோட்டில் வாகனத்தை திருப்பிய ஓட்டுநர், சைக்கிளில் சென்றவரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமே விதிகளை மீறுவது தான். சிலர் சைடு பார்க்காமல் வாகனத்தை இயக்குவது பேராபத்தில் முடிகிறது. அதேநேரம் சிலர் குறுக்கே வந்த நபரை காப்பாற்றுவதற்காக வாகனத்தை திசைமாற்றி திருப்பும் போது, விபத்தில் இறக்க வேண்டிய நபருக்கு பதிலாக ஏராளமானோர் இறந்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சைடுபார்க்காமல் வாகனத்தை சட்டென திருப்பி சிக்னலில் வளைந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அதுவும் பெரிய விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. இதே போல் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை சட்டென முந்தி செல்லும் போதும் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை முந்தி செல்லும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் திறமையான செயல்பாட்டால் நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார். அந்த பேருந்து ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள் வருகிறது.
நாமக்கல் மாவட்டம் வெப்பட்டை அருகே சைக்கிளில் வந்தவர் திடீரென குறுக்கே புகுந்த நிலையில், அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பக்கத்து ரோட்டில் வாகனத்தை திருப்பிய ஓட்டுநர், சைக்களில் சென்றவரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலர், சைக்கிளில் வந்தவரை காப்பாற்றியதை பாராட்டினாலும், அந்த நேரத்தில் பேருந்து அல்லது வேறு ஏதேனும் வாகனங்கள் வந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஓட்டுநரின் சமயோஜிதமான செயல்பாடு காரணமாக, தவறாக வந்த சைக்கிள் ஓட்டுநர் அதிசயமாக தப்பி உள்ளார். உண்மையில், இது மிகவும் பாராட்டப்பட்ட ஓட்டுநரின் சூப்பரான முடிவு என்றார்.
https://x.com/GunasekaranMu/status/1714188628270690327?s=20-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications