சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: விருதுநகரில் 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு
விருதுநகர்: சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையிலுள்ள ஏ.பி.டி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. டிங்கர் தொழிலாளியான இவரது மகன் அஜீத்குமார், அப்பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அஜீத்குமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற அஜித்குமாருக்கு மீண்டும், அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஜீத்குமார், நேற்று மாலை பள்ளி முடிந்து திரும்பியதும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்காயங்களுடன் போராடிய அஜீத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அஜீத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 98 சதவிகித தீக்காயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அஜீத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இது தொடர்பாக விருதுநகர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications