சென்னையில் மாடல்களுக்கான 'மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான்' போட்டி!
இந்தியாவில் ஃபேஷன், மாடலிங் போன்ற விஷயங்களில் சென்னை மாநகரம் டெல்லி, மும்பைக்கு நிகராக முன்னேறி வருகிறது. குறிப்பாக மாடலிங் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இல்லாமல் சினிமா, விளம்பர படங்களுக்கான நுழைவு வாயிலாகவும் அமைவதால் இன்றைய இளைஞர்கள் மாடலிங்கை நோக்கி படையெடுக்கின்றனர். அப்படி மாடலிங்கில் சாதிக்க விரும்பும் நாளைய யூத் ஐகான்களுக்காக ஒரு மாபெரும் நிகழ்ச்சி சென்னையில் நடக்கவிருக்கிறது.

சென்னையின் பிரபல மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான சென்னை மாடல்ஸ் நடத்தும் மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017 நிகழ்ச்சி ரெஜெண்டா சென்னை டெக்கான் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. அழகும் திறமையும் கொண்ட மிஸ்டர், மிஸ்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சென்னை மாடல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காவேரி மாணிக்கத்திடம் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றிக் கேட்டோம்.

"இந்திய அளவில் மாடலிங் துறை மிக வேகமாக வளர்ந்தாலும் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு ஒரு தயக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. தென்னிந்தியாவுக்கே முக்கிய ஃபேஷன் நகரமாக விளங்கும் சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மாடலிங் துறையை நேசிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி ஆர்வமுடன் வருபவர்கள் மாடலிங் துறையில் வெற்றிகரமாக பிரகாசிக்க அனைத்து உதவிகளையும் எங்கள் நிறுவனம் அளிக்கும்,'' என்றார்.
16 முதல் 28 வயது வரை உள்ள ஆண், பெண் இதில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான தகுதித்தேர்வு 11 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடக்கிறது. இதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி, இறுதி சுற்றுகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் பிராண்ட் அம்பாசடர்களாக நடிகை ஷிவதா நாயர் மற்றும் மிஸ் சவுத் இண்டியா 2016 பட்டம் வென்ற மீரா மிதுன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பதிவு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 17.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்
http://www.chennaiyil.com/item/mr-miss-fashion-icon-of-chennai-2017-royapettah/
என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications