இளைஞரின் கல்லீரல் பொருத்தப்பட்டது சசிகலா கணவர் நடராஜனுக்குத்தானா? குளோபல் அறிக்கையால் சர்ச்சை
சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் பொருத்தப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட நினைத்தார் நடராஜன். ஆனால் உடல்நலக் குறைவால் அவரால் தீவிரமாக இயங்க முடியவில்லை.
அப்பல்லோ மருத்துவமனையில் சிறிது காலம் சிச்கிச்சை பெற்றார் நடராஜன். பின்னர் சென்னை குளோபல் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் மீண்டும் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.
|
நடராஜன் பெயருடன் அறிக்கை
நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதும் இருந்தது. இது தொடர்பாக சென்னை குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளில் நடராஜனின் முழு பெயரையும் குறிப்பிட்டே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

நடராஜனுக்கு சிகிச்சை வெற்றி
நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்கிற செய்தியையும் கூட தெளிவாகவே குளோபல் மருத்துவமனை குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் திடீரென நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சசிகலா தரப்பினர் தெரிவித்தனர்.

74 வயது நபருக்கு பொருத்தம்
ஆனால் குளோபல் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக 74 வயது முதியவர் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குளோபல் அறிக்கையால் சர்ச்சை
நடராஜனுக்கு கல்லீரல் பொருத்தப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே சர்ச்சை வெடித்திருக்கிறது. விபத்தில் சிக்கிய இளைஞர் திடீரென மூளைச் சாவடைந்தது எப்படி? அவர் எப்படி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார்? என்கிற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் குளோபல் மருத்துவமனையின் அறிக்கையில் 74 வயது நபர் என மட்டும் குறிப்பிடப்பட்டு நடராஜன் பெயரை ஏன் தவிர்த்தார்கள்? என்பதும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications