பெங்களூரு- சேலம் நெடுஞ்சாலையில்.. நொடியில் நடந்த சம்பவம்.. நள்ளிரவில் கணவருடன் உயிரிழந்த கர்ப்பிணி
கிருஷ்ணகிரி: மோட்டார் சைக்கிளில் மைசூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்த கணவன் மனைவி திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் கர்ப்பிணி உயிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வது அபாயகரமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் அசுர வேகத்தில் வரும் பெரிய வாகனங்கள் சாலையோரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

இதுஒருபுறம் எனில் நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் பள்ளம் இருந்தால் தெரிவது இல்லை. இதுவும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படித்தான் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியை அடுத்த மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவருக்கு 28 வயது ஆகிறது. இவர் கட்டிட தொழிலாளியாவார். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதாகும் அபிநயா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் நடந்தது.
காதல் ஜோடியான அரவிந்தன் அபிநயா தம்பதி, கர்நாடக மாநிலம் மைசூருவில் கட்டிட வேலை செய்து வசித்து வந்தார்கள். தற்போது அபிநயா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அரவிந்தன் அபிநயா தம்பதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் கடந்த நவம்பர் 26ம் தேதி நள்ளிரவு மைசூருவில் இருந்து தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அணை பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அரவிந்தன், அவரது மனைவி அபிநயா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது. பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் திருமண விழாவிற்கு சென்ற தம்பதி, லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிச்சை என்பவருடைய மகன் கோவிந்தராஜ் . இவருக்கு வயது 24 ஆகிறது. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார. இவருக்கும், சேலம் மாவட்டம், நாவலூரை சேர்ந்த சேகரின் மகள் ரேணுகாவுக்கும்(21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 1¼ வயதில் சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் 23ம் தேதி நள்ளிரவு மனைவி ரேணுகாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கோவிந்தராஜும், ரேணுகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications