"அம்மா" வரட்டும், பிறகுதான் நான் ஊர் திரும்புவேன்... அப்பல்லோ வாசலில் காத்திருக்கும் மாற்று திறனாளி
ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்பும்வரை ஊர் திரும்பப் போவதில்லை என்று 34 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை வாசலில் மாற்றுத்திறனாளி காத்திருக்கிறார்.
சென்னை: மருத்துவமனையில் இருந்து "அம்மா" வீடு திரும்பிய பின்னரே நான் ஊர் திரும்புவேன் என்று மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ள நலத்திட்ட உதவிகளுக்கு நன்றிக்கடனாகவே தான் இங்கிருந்தபடி பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 35வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியான நாளில் இருந்தே, தினமும் பலர் அப்பல்லோ வாசலுக்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு செல்கின்றனர். பல தொண்டர்கள் உருள்வலம் வருகின்றனர். நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், 30 என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனை வாசலிலேயே காத்துக்கிடக்கிறார். 34 நாட்களாக அவர், ஜெயலலிதாவின் பூரண உடல்நலத்துக்காக பிரார்த்தனை செய்யும் அவர், ஜெயலலிதா வீடு திருப்புவதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். எம்.ஏ. பி.எட். படித்துள்ள இவர், சின்ன சேலம் கிராமத்தில் டியூசன் எடுத்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகளுக்காக 3 சக்கர வாகனங்களும், மருத்துவ சான்றுகளும் வழங்கியுள்ளார். தமிழக மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனவே, அவருக்கு நன்றி கடன் பட்டுள்ள நான் இங்கேயே அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவர் வீடு திரும்பும் நாளில் தான் நானும் வீடு திரும்புவேன் என்று கூறி வாசலில் காத்திருக்கிறார் மணிவண்ணன்.
இவருக்கு அம்மா உணவகம் 3 வேளையும் பசியாற்றுகிறது. இவரைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications