அழகு நிலைய பெண் மீது சரமாரி தாக்குதல்.. தாக்கியவர் மாஜி திமுக பிரமுகர் என்பதால் பரபரப்பு!
பெரம்பலூர் அருகே அழகு நிலைய பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video

பெரம்பலூர்: அழகு நிலைய பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் அவர், அப்பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றவர் என கூறப்படுகிறது.

பெண் மீது தாக்குதல்
இந்நிலையில் வெங்கடேசபுரத்தில் சத்யா நடத்தி வரும் அழகு நிலையத்தில் திடீரென புகும் அவர் சத்யாவை சரமாரியாக தாக்குகிறார். பெரும்பாலும் கால்களாலேயே உதைக்கும் அவர் சத்யாவின் கழுத்தை பிடித்து கீழே தள்ளுகிறார்.

வயிற்றில் உதை
அப்போது வலி தாங்காமல் கீழே விழுந்தபடி கதறுகிறார் சத்யா. ஆனால் பெண் என்றும் பாராமல் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி சரமாரியாக வயிற்றிலேயே உதைக்கிறார் செல்வகுமார்.

அடங்காமல் உதைக்கும் செல்வகுமார்
செல்வகுமாரை அங்குள்ள மூன்று பெண்கள் தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும் அடங்காமல் சத்யாவை தாறுமாறாக உதைப்பதிலேயே குறியாக இருக்கிறார் செல்வகுமார்.

சங்கிலியை கழற்றும் சத்யா
ஏதோ பேசிக்கொண்டே அவரை தாக்குகிறார் செல்வகுமார். ஒரு கட்டத்தில் தான் அணிந்திருக்கும் சங்கிலியை கழற்றி அங்குள்ள பெண்ணிடம் கொடுக்கிறார் சத்யா.

காலை தூக்கி தூக்கி
பின்னர் செல்வகுமாரிடம் இருந்து வேறு இடத்திற்கு செல்கிறார். அப்போதும் விடாமல் அவரை துரத்தி சென்று காலை தூக்கி தூக்கி உதைக்கிறார் செல்வகுமார்.

வீடியோவால் பரபரப்பு
ஆனால் சத்யா திருப்பி தாக்கவில்லை. செல்வகுமார் சத்யாவை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விசாரணை நடத்தப்படும்
இந்த தாக்குதல் குறித்து எந்த புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆனால் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் சத்யா மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் அத்துமீறல்
ஏற்கனவே திமுகவினர் சென்னையில் பிரியாணி கேட்டு பிரியாணி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் செல்போன்கடையில் புகுந்து அடாவடி செய்தனர். இந்நிலையில் அழகு நிலைய பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications