தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை.. பெரம்பலூர் அருகே இடிதாக்கி விவசாயி பலி!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழையில் இடிதாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
வங்கக்கடலில் இலங்கை வரை நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு, சேக்கிபட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கன்னிவாடி, செட்டிநாயக்கன்பட்டி, ரெட்டியார்சத்திரம் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னம் அருகே கூடலூரில் அறிவழகன் என்பவர் இடிதாக்கி உயிரிழந்தார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இடி தாக்கியதில் விவசாயி அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications