சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா மாற்றம்! புதிய ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம்!
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக ஏ.கே. விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த கரன் சின்ஹா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏகே விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கமிஷனராக ஜார்ஜ் பதவி வகித்து வந்தார்.

சசிகலாவின் ஆதரவாளர் என்பதால் ஜார்ஜ் அப்பதவியில் நீடித்தால் தேர்தல் ஜனநாயக முறைப்படி, நியாயமாகவும் நடைபெறாது என்று திமுக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பே ஜார்ஜ் சென்னை கமிஷனர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பின்னர் கரன் சின்ஹா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கரன் சின்ஹா மாற்றப்பட்டு போலீஸ் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டார்.
சென்னை காவல் துறை புதிய ஆணையராக ஏ.கே.விசுவநாதன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் கரன் சின்ஹா சிறப்பாக செயல்பட்டார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை மிரட்டியதாக புகாரின் பேரில் அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications