சாத்தூர் அருகே பயங்கரம்.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
சாத்தூர் அருகே கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

விருதுநகர் மாவட்டம் சாத்துரை அடுத்த ரெட்டியாப்பட்டியை சேர்ந்தவர் பொன் மகாலட்சுமி. பொன் மகாலட்சுமி தூத்துக்குடி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மதன். இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி கொடூர கொலை
மதனும் பொன் மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ரெட்டியாப்பட்டியில் மாணவி பொன் மகாலட்சுமியை மதன் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை
பின்னர் வீட்டிற்கு சென்ற மதன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாணவி அஸ்வினி
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மையில் சென்னையில் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications