மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

வெயில் வாட்டி வதைத்த சென்னையிலும் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதானல் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மக்கள் சற்று விடுதலை பெற்றுள்ளனர்.
இதனிடையே மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications