எழுத்தாளர் ஆ. மாதவனின் 'இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது
சென்னை: தமிழ் எழுத்தாளர் ஆர்.மாதவன் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது வழங்கப்படுகிறது.
ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஆவுடைநாயகம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். தாயார் செல்லம்மாள். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்தவர். அவரது தந்தை குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புடன் படிப்பை நிறுத்திய மாதவன், வேலைக்குச் சென்றார். பின்னர் சாலைத்தெருவில் ஒரு சிறு கடை வைத்தார். மாதவனின் முதல் கதை 1955ல் சிறுகதை இதழில் வெளியானது. அதன்பின்னர் தமிழில் பல சிறுகதைகளை எழுதியுளளார். இவரது சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. புனலும் மணலும், கிருஷ்ண பருந்து, தூவானம் போன்ற குறுநாவல்களும் எழுதியுள்ளார்.
இவர் தனது கதைகளில் திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக பதிவு செய்திருப்பது சிறப்பம்சம். 2010ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை பெற்றார். இந்த விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் 2014ம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய ‘இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசால், இலக்கியத் துறைக்காக வழங்கப்படும் முக்கிய விருதுகளில் சாகித்ய அகாடமி விருதும் ஒன்று. ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2014ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு ஆ. மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு சென்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தால் இலக்கியச் சுவடுகள் என்ற இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications