சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு ஒருவர் திடீர் தீக்குளிப்பு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் முன்பு சேலத்தைச் சேர்ந்த நபர் திடீரென தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாக இன்று பிற்பகல் திடீரென ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்டு திடுக்கிட்ட போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

தற்போது தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளிக்க முயற்சித்த நபர் சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
என்ன காரணத்துக்காக அவர் தீக்குளிக்க முயற்சித்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications