நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் ஓட்டம்.. தூக்குபோட்டு இளைஞர் தற்கொலை

ஈரோடு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனுடன் ஓடிப்போனதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனுடன் ஓடிப்போனதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பச்சமலை அடிவாரப் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். 22 வயதான இவர் சுற்றுலா வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

A man commit suicide for his fiancee ran away with her lover!

இவருக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு தேனி மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி சரண்யா தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அவரது காதலனை சரண்யா திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சரண்யாவின் பெற்றோர் மணிகண்டனின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் கடந்த ஒரு மாதமாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த நண்பர்களிடம் தனக்கு நிச்சயமான பெண் வேறொருவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்டதைக் கூறி மணிகண்டன் புலம்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவடன் ஓடிப்போனதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+