இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லை.. விஷம் அருந்தி தந்தை பலி.. தாய்-மகள் கவலைக்கிடம்
வறுமை காரணமாக தாய்-தந்தை-மகள் என 3 பேரும் விஷம் குடித்தனர்.
மண்ணச்சநல்லூர்: இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லாத கவலையில் தந்தை-தாய்-மகள் என குடும்பமே விஷம் அருந்தியது. இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாயும்-மகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
பொறியில் படிக்க பணம் இல்லாத விரக்தியில் பெற்றோருடன் மாணவி விஷம் குடித்தார். இதில் தந்தை பலியானார். தாயும், மகளுடன் தீவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். வயது 55. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரே மகள் காயத்ரி. இந்த ஆண்டுதான் பிளஸ் 2 முடித்தார். பிரபாகரன் தன் மகளை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் குறைவான சம்பளம் காரணமாக குடும்பமே வறுமையில் தவித்து கிடந்ததால், மகளை படிக்க முடியவில்லை.
இதுகுறித்து அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததுடன், மன அழுத்தத்திலும் இருந்துள்ளார். இதுபோலவே கலைவாணியும், காயத்ரியும் விரக்தியில் இருந்து வந்துள்ளனர். அதனால் 3 பேருமே தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி நேற்று பிற்பகல் 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.
நீண்ட நேரம் யாரும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததாலும், இரவு நேரமாகியும் வீட்டில் விளக்கு எரியாததாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, 3 பேருமே மயங்கி விழுந்திருந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார். கலைவாணியும், காயத்ரியும் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications