சென்னை அருகே பயங்கர சத்தம்.. ராக்கெட் லாஞ்சரை எடைக்கு போட எடுத்துச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மலைப் பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடைக்குப் போடுவதற்காக எடுத்துச் சென்று உடைத்தபோது அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஆர்பிஎப், சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ராணுவப் படைகளில் பணிபுரிபவர்கள் இங்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சுடப்படும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க வேண்டும். இப்படி ராக்கெட் லாஞ்சர்களை வைத்து பயிற்சி எடுக்கும்போது அதனுடைய அலுமினியம், பித்தளை போன்ற உதிரி பாகங்கள் அப்பகுதியில் சிதறி கிடக்கும்.
அந்தப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை என்பதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச்சூடு பயிற்சி முடிந்த பிறகு பொறுக்கிச் சென்று விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நேற்று அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் (52) என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடைக்குப் போட்டு காசு வாங்குவதற்காக எடுத்துச் சென்று, தான் வைத்திருந்த கத்தியால் உடைத்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, ஒருவர் ராக்கெட் லாஞ்சரை எடுத்துக் கொண்டு சென்றபோது அது கீழே விழுந்து வெடித்ததில் அப்பகுதியில் உள்ள மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கு சொந்தமான பொருட்களை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் இப்பகுதியில் உள்ள மக்களின் அறியாமையால் அவற்றை எடுத்துச் செல்வதால் அசம்பாவிதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications