தூத்துக்குடி - சென்னை புதிய விமான சேவை நாளை முதல் தொடக்கம்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிற 20-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் புதிய விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக பெரிய அளவில் பயன்படாமலேயே இருந்து வந்தது. இடையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சென்னைக்கு விமான சேவையைத் தொடங்கியது. வெற்றி பெறாததால் சில மாதங்களிலேயே நிறுத்திக் கொண்டன.

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் 'ஸ்பைஸ்ஜெட்' தனியார் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை நாளை முதல் முதல் தொடங்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 'ஏர் கார்னிவெல்' என்னும் தனியார் நிறுவனம் மூலம் 72 இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மாலை 3.50 மணிக்கு வந்து சேரும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு 5.50 மணிக்கு சென்றடையும். இதனால் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications