சிக்சர் அடிக்கிறவங்களை சீண்டிகிட்டே 'மட்டையா'ட்டம் போட்டா எப்படி? ஸ்கோர் கிடைக்குதுன்னு 'காண்டு'?
சென்னை: தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் உலா வரும் உரையாடல்தான் இந்த செய்தியின் சாராம்சம்.
இலக்கியத்தை தாண்டி அரசியலுக்கு வந்தார்.. அவருக்கும் தெரியும்.. எவ்வளவு முயற்சித்தாலும் இவ்வளவுதான் ஏற முடியும் என. அதனால்தான் தமக்கு என ஒரு ஏரியாவில் ஒதுங்கிக் கொண்டு அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறார்.

அப்படி எல்லாம் ஒதுங்கி கொள்ள முடியுமா? ஓரமாக நின்று ஆடினாலும் எங்களுக்கு குடைச்சல்தானே.. சீனிலேயே இருக்க முடியாது என குறுக்கே மறுக்கே ஓடி ஓடி இடையூறு செய்வதுதான் சிலருக்கு வாடிக்கையாக போய்விட்டது.. அது சாத்தான்குளமாக இருந்தாலும் சரி டெல்லி ஜேஎன்யூவாக இருந்தாலும் சரி எங்கேயாவது போய் குறுக்குசால் ஓட்டுவதுதான் வழக்கமாம்.
ஆகட்டும் பார்க்கலாம் என பெருந்தன்மையுடன் கடந்து போகிறவருக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்கிறது.. தேடிப் போய் வாங்கியவருக்கோ அவங்களுக்கு எப்படி எல்லாம் கிடைக்கலாம் என்கிற கோபம்.
இப்போதும் அப்படித்தான். அவரது எக்ஸ் பக்கத்தை பார்ப்பவர்களுக்கு புரியும்.. நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய என்ன என்ன பணி செய்யப்பட்டது என இடைவிடாமல் பட்டியல் போட்டு கொண்டே இருக்கிறார் பம்பரமாக சுழல்கிறார்.. பாச மழையில் நனைகிறார்.. பெருவெள்ளம் அவருக்கு பெரும் இமேஜை வாரி வாரி கொடுக்கிறது.. அத்தனையும் உழைப்புதான்..
இவரும் சும்மா இல்லைதான்.. இவருக்கான ஏரியாவில் தடி எடுத்து தடாலடி ஆடுகிறார்தான்.. அத்துடன் நின்றால் பிரச்சனை இல்லையாம்.. அவங்க இப்படி சிக்சர் அடிச்சா எப்படி? நாங்களும் ஆட்டைக்கு வருவோம்யா என களத்தில் இணைந்து கொண்டார்.. சரி ஆடுகிறவரோடு ஓடினாலும் பரவாயில்லை.. சிக்சர் அடிப்பவரை அடிக்கவிட்டாலும் பரவாயில்லை.. அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கவே கூடாது என 'மட்டையாட்டம்' போடும் முடிவுடன் ஆடுகளத்திலேயே அடம்பிடித்து நின்று கொண்டிருக்கிறார்.. ஒரு பந்து கூட அவருக்கு போய்விடக் கூடாது என்கிற 'காண்டு'தான் அப்படியெல்லாம் செய்ய சொல்கிறது என்பது பார்க்கிறவர்களுக்கு புரிகிறது.. புரிந்தும் சிக்சர் அடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை... களத்திலாவது நிற்கிறோமே என்கிற பெருந்தன்மையுடன் கடந்தும் போகிறார் மாஜி இலக்கியவாதி இன்றைய அரசியல்வாதி.. இப்படித்தான் அரசியல் களத்தில் உரையாடல் நீடிக்கிறது!
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications