தமிழகத்தில் முதல் முறையாக வெள்ள சேதத்தை தடுக்க வெண்ணாற்றில் கேபியான் தடுப்புச் சுவர்
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக கேபியான் என்ற புதிய தொழில் நுட்பத்தில் களஞ்சேரி வெண்ணாற்றில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மழை வெள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சத்தியகோபால் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, அக்னியாறு, கல்லணை கால்வாய் கோட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் செயற்பொறியாளர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாபநாசத்தை அடுத்த களஞ்சேரி கிராமத்தில் வெண்ணாற்றங்கரையில் புதுமையான முறையில் தமிழகத்தில் முதன்முறையாக கேபியான் என்ற முறையை பயன்படுத்தி கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கேபியான் என்றால் இத்தாலி மொழியில் இதற்கு கூண்டு என்று பொருள்.
இது ரூ.2 கோடி மதிப்பீட்டில் 500 மீட்டர் நீளத்திற்கு வெண்ணாற்றின் இடது மற்றும் வலது கரைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் கூண்டு போன்ற கம்பிகள் அமைக்கப்பட்டு, அதில் சிறு சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி நகராமல் பாதுகாக்கப்படுகிறது.
இது கான்கிரீட் சுவரைக் காட்டிலும் வலிமையானதாகும். இது 50 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும். இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீர் வரும்போது கரை உடைப்பேதும் ஏற்படாமல் கரையில் உள்ள மண் அரிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.
இந்த அமைப்பின் மூலமாக அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்போது விவசாய சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் கரையின் இருபக்கமும் பலப்படுத்தப்பட்டதால் சுமார் ஆயிரம் ஏக்கர் பயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் மோசமான நிலையில் கரை பாதிப்படைந்த 10 பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் கிடைத்தவுடன் தமிழக முதல்வரிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த 240 மின் கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள காலங்களில் மின் தடை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சத்தியகோபால் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications